செங்கல்பட்டு மாவட்டம் , திருப்போரூர் அடுத்த கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 41. இவர், நேற்று முன்தினம் வீட்டில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தோர் உடனே அவரை மீட்டு, திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.