பாலுலூர் ரயில்வே கேட்சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

255பார்த்தது
பாலுலூர் ரயில்வே கேட்சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பாலுார் சிங்கபெருமாள் கோவில் சாலை 13 கி.மீ. நீளம் கொண்டது. இந்த சாலையை பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டி பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, பாலுார் ரயில்வே கேட் பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. மேலும், மண் குவிந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள மண்ணை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி