ஸ்ரீபெரும்புதூர்: சாலையில் திரியும் மாடுகளால் வடகாலில் விபத்து அபாயம்

70பார்த்தது
ஸ்ரீபெரும்புதூர்: சாலையில் திரியும் மாடுகளால் வடகாலில் விபத்து அபாயம்
சென்னை - பெங்களூரு - தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் - வாலாஜாபாத் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதூர் - சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது. ஓரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நெடுஞ்சாலையில், வல்லம், வடகால், போந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை வைத்திருப்பவர்கள், கொட்டகைகளில் வைத்து பராமரிக்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். அவை கூட்டம் கூட்டமாக சாலைகளில் வலம் வருவதோடு, திடீரென சாலையில் குறுக்கும் நெடுக்கமாக ஓடுவதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாட்டின் மீது மோதி, விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி