சோழிங்கநல்லூர் 15வது மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் அறிமுகக் கூட்டத்தில்
திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எம்எல்ஏ சரவணன் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசியபோது, தவெக நிர்வாகிகள் 25க்கும் மேற்பட்டோர் உள்ளே வந்து அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுவது போல் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.