வாகன விபத்தில் கணவர் கண்முன் மனைவி பலியான சோகம்

0பார்த்தது
வாகன விபத்தில் கணவர் கண்முன் மனைவி பலியான சோகம்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த சீனிவாசன் (49) மற்றும் மல்லீஸ்வரி (46) தம்பதியினர் மேடவாக்கம் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு நூக்கம்பாளையம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த கார் அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், மல்லீஸ்வரி பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி