பேருந்தின் மீது மோதிய டூவீலர், உயிர் தப்பிய இளைஞர்

133பார்த்தது
பேருந்தின் மீது மோதிய டூவீலர், உயிர் தப்பிய இளைஞர்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது கூரியர் ஊழியர் சுரேஷ், நேற்று (ஜூன் 2) செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதிக்கு பொருள் டெலிவரி செய்ய கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்துள்ளார். கானத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதியதில், அவரது இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி