நடந்து சென்றவரை தாக்கி வழிப்பறி செய்த வாலிபர்கள் கைது

2பார்த்தது
நடந்து சென்றவரை தாக்கி வழிப்பறி செய்த வாலிபர்கள் கைது
திருக்கழுக்குன்றத்தில், மானாமதி அரிசி ஆலையில் பணிபுரியும் நசீர் (46) என்பவர், திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலைய சந்திப்பு பகுதியில் நடந்து சென்றபோது, சரவணன் (21) மற்றும் முத்தமிழ்மாறன் (23) ஆகியோர் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கி, அவரிடமிருந்து 'விவோ' மொபைல் போன் மற்றும் 5,000 ரூபாயை பறித்துச் சென்றனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். காயமடைந்த நசீருக்கு தலை உள்ளிட்ட பாகங்களில் 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.