பட்டினப்பாக்கத்தில் இளைஞர் வெட்டி கொலை: இருவர் கைது

246பார்த்தது
பட்டினப்பாக்கத்தில் இளைஞர் வெட்டி கொலை: இருவர் கைது
மயிலாப்பூர் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த அஸ்வத், நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த அஸ்வத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அசாத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி இதே பகுதியில் ரவுடி மவுலி கொலை செய்யப்பட்ட நிலையில், 10 நாட்களுக்குள் இந்த இரண்டாவது கொலை சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி