
செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை தேக்கி சோதனை
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, சமீபத்திய பலத்த மழையால் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம் 23.67 அடியாகவும், கொள்ளளவு 3,559 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 2015ல் 23.45 அடி நீர் இருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது ஏரியின் மதகுகள் மற்றும் கரைகளின் பலத்தை சோதிக்க, அதிகாரிகள் 24 அடி வரை நீர் தேக்க முடிவு செய்துள்ளனர். ஷட்டர்களில் சென்சார் மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்தே நீர்மட்டத்தை கண்காணிக்கவும், உபரிநீரை திறக்கவும் வசதி உள்ளது.


































