செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த இமானுவேல் ஆகியோர் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு டவுன் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து 8 கிலோ கஞ்சா, 9 செல்போன்கள், 1 லேப்டாப் மற்றும் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.