செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 45. இவர், குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவரது குடிசை வீட்டிற்கு மேல், குடியிருப்பு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள,
மின்கம்பிகள் செல்கின்றன. நேற்று (ஜூன் 13) இந்த மின்கம்பிகளில் இருந்து தீப்பொறி விழுந்து, குடிசை வீடு தீப்பற்றியது. வீடு தீப்பற்றியதை அறிந்த அன்பழகன், குடும்பத்துடன் உடனே வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், குடிசை வீடு முழுதும் எரிந்து, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.