செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து, நேற்று அதிகாலை காலியாக, ஒரகடம் நோக்கி சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்றது.
ஆப்பூர் மாந்தோப்பு அருகில் அதிவேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள மையத் தடுப்பு மற்றும் மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. விபத்து ஏற்பட்டு 4 மணி நேரம் வரை, சாலை மையத் தடுப்பில் இருந்து, பேருந்து அகற்றப்படாமல் இருந்தது. அந்த நேரத்தில், சாலையில் வேறு வாகனங்கள் செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்த தகவலின்படி வந்த பாலுவார் போலீசார், பேருந்தை அங்கிருந்து அகற்றி, காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, பாலுவார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.