அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி இரண்டு துண்டாக உடைந்தது

0பார்த்தது
அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி இரண்டு துண்டாக உடைந்தது
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து சரக்கு ரயில் மூலம் காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்திற்கு வந்த இரும்பு தகடு ரோல்கள், லாரியில் ஏற்றப்பட்டு சென்னை ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் தொழிற்சாலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. கிழக்கு ரயில் நிலையம் அருகே அதிக பாரம் தாங்காமல் லாரி இரு துண்டுகளாக உடைந்து காஞ்சிபுரம்-வையாவூர் சாலையில் விழுந்தது. ராட்சத கிரேன் மூலம் இரும்பு தகடு ரோல்கள் அகற்றப்பட்டதால், சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி