செங்கல்பட்டு வட்டார
போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 604 தனியார் பள்ளி வாகனங்களை, பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று (மே 16) கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. வட்டார
போக்குவரத்து அலுவலர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் ரம்யா உள்ளிட்டோர் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 30 வாகனங்களின் தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.