செங்கல்பட்டு: போதையில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

3பார்த்தது
செங்கல்பட்டு: போதையில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (38) என்பவரின் மகன் சஞ்சய் (17), செங்கல்பட்டு அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட ராமலிங்கத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சஞ்சய், தந்தையிடம் இதுகுறித்து கேட்டபோது, ஆத்திரமடைந்த ராமலிங்கம் அவரை கத்தியால் கழுத்தில் குத்தினார். இதில் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் ராமலிங்கத்தை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி