ராணிப்பேட்டை மாவட்டம் நாகவேடு கிராமத்தைச் சேர்ந்த கீர்த்தனா (17), அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாதபோது நேற்று அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு இன்று பிப்ரவரி 16 ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார
் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.