காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மினி பஸ் சேவை பாதிப்பதாகக் கூறி மனு அளித்தனர். சுங்குவார்சத்திரம் - பிள்ளைச்சத்திரம் இடையே ஷேர் ஆட்டோ இயக்கும் 50 ஓட்டுநர்கள், ஏற்கனவே பல பேருந்துகள் இயங்கும் வழித்தடத்தில், தனியார் மினி பஸ் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். பிள்ளைச்சத்திரம் வழியாக கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய மினி பஸ், சுங்குவார்சத்திரம் வரை இயக்கப்படுவதாகவும், இதற்கு அனுமதி இல்லாத மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.