செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணிபுரிந்து வந்த வேதாச்சலம் (48) என்பவர், திருமுக்காடு கிராமத்தில் மின்தடையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் நிறுத்தப்படாததால் மின்மாற்றி பொருத்தப்பட்ட கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்ய முயன்றார். எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று (மே. 31) நிகழ்ந்தது.