மதுராந்தகம் அருகே போலீஸ் வாகனம் மீது அரசு பேருந்து மோதல்

3பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ரோந்து வாகனம் கடுமையாக சேதமடைந்தது. பேருந்தின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தது. இதில் சிறப்பு காவல் ஆய்வாளர் குணசேகர் மற்றும் காவலர் விஜயராஜ் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த காவலர்கள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி