காஞ்சிபுரம் செங்கல்வராய நாயக்கர் ஐடிஐ அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதிவாணன் (29) என்பவரை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்து, 1400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ஒலிமுகமதுபேட்டை பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை விற்பனை செய்த துரை (65) என்பவரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.