காஞ்சி சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

234பார்த்தது
காஞ்சி சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
காஞ்சிபுரம் அடுத்த ஐயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முரளி (33) என்பவர், 2019ல் அதே பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நேற்று (ஜூன் 2) காஞ்சிபுரம் போக்சோ நீதிமன்றத்தால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். மேலும், ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீப்தி அறிவுநிதி தீர்ப்பளித்தார். வாலாஜாபாத் போலீசார் முரளியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.