சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஆசிரியை ஜெயபாரதியின் பைக் திருட்டு தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் 2 சிறுவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருவண்ணாமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.