கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில்'பார்க்கிங்' ஒப்பந்ததாரர் அடாவடி

63பார்த்தது
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில்'பார்க்கிங்' ஒப்பந்ததாரர் அடாவடி
செங்கல்பட்டு மாவட்டம்நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்தம் செயல்படுகிறது. இதை, அப்பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் ஒப்பந்தம் பெற்று, இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகிறார்.

இந்நிலையில், இங்கு வாகனங்கள் அதிக அளவில் வருவதை தொடர்ந்து, ஒப்பந்தம் பெறப்பட்டுள்ள எல்லை மட்டுமின்றி, பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடம், பயணியர் நடந்து செல்லும் இடங்களையும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி, அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால், பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கும், பயணியருக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி