செங்கல்பட்டு: குவாரி லாரிகளால் சல்லடையான சாலை

69பார்த்தது
செங்கல்பட்டு: குவாரி லாரிகளால் சல்லடையான சாலை
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாமூர் கிராமத்தில் ரோட்டுக்கடை பகுதியில் இருந்து கொளத்தூர் செல்லும் தார் சாலை உள்ளது. இச்சாலையை கொளத்தூர், பெருவெளி, நல்லாமூர், கோட்டிவாக்கம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கொளத்தூர் பகுதியில் செயல்படும் கல்குவாரிக்கு தினசரி ஏராளமான லாரிகள் அதிக பாரங்கள் ஏற்றிச் செல்கின்றன. இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது. கோடை காலத்தில் சாலையில் புழுதி பறப்பதாகவும், மழைகாலத்தில் சாலை சகதியாக மாறுவதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி