செய்யூர் பஜார் சாலை விரிவாக்கம்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

300பார்த்தது
செய்யூர் பஜார் சாலை விரிவாக்கம்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பஜார் வீதி குறுகலாக உள்ளதால், அதனை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில், தேவராஜபுரம் வழியாக தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலை 10 அடி மட்டுமே அகலம் கொண்டுள்ளது. இதனால் கார், வேன், பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் சென்றுவர சிரமமாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.