செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கீழாமூர் கிராமத்தில் தனியாக வசித்து வந்த சாமிநாதன்-முத்தாலம்மன் தம்பதியினரில், முத்தாலம்மன் (80) கடந்த 23ம் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். உறவினர்கள் இயற்கை மரணம் என நினைத்து அடக்கம் செய்த நிலையில், அவர் அணிந்திருந்த 5 சவரன் நகை காணாமல் போனதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி வாசுதேவன் (47) நகைக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.