மாமல்லபுரம் கடற்கரையில், கடற்கரை கோவிலுக்கு தெற்கில், 200 மீட்டர் தொலைவில், ஜனவரி 29 அன்று, கடற்கரை மணற்பரப்பில் புதைந்திருந்த சிறிய பாறைக்குன்று வெளிப்பட்டது. கடலில் ஏற்படும் நீரோட்ட திசைமாற்றம் காரணமாக, கடல் மணல் கரையை நோக்கி குவிந்து, ஆறு மாதங்களில் புதிய மணற்பரப்பு உருவாகும். மீண்டும் கடற்கரை மணல் அரிக்கப்பட்டு, கடல்நீர் நிலத்தில் புகுந்து, ஆறு மாதங்கள் கடல் சூழ்ந்துவிடும். தற்போது கடலரிப்பு அதிகமாகியுள்ள நிலையில், மணலில் நீண்டகாலமாக புதைந்திருந்த குன்றுதான் தற்போது வெளிப்பட்டுள்ளது.