செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த மணப்பாக்கம் அன்பு (55), மேலப்பாக்கம் ஆகாஷ் (31) மற்றும் முருகன் (30) ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டதில், அவர்களிடம் இருந்து 192 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.