ஸ்ரீபெரும்புதூரில் குட்கா விற்ற இருவர் கைது

50பார்த்தது
ஸ்ரீபெரும்புதூரில் குட்கா விற்ற இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள கடைகளில், ஒரகடம் போலீசார் நேற்று (டிச.28) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 'டினெகோ' தொழிற்சாலை அருகே உள்ள பெட்டிக் கடையில், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. 

இதையடுத்து, 2,000 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளரான, ஆந்திராவைச் சேர்ந்த மாஜ்ஜி அப்பாயம்மா, 55, கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.