வண்டலூர்: வெளிவட்ட சாலையில் கனரக வாகனங்கள் மோல்

578பார்த்தது
வண்டலூர்: வெளிவட்ட சாலையில் கனரக வாகனங்கள் மோல்
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது, பின்னால் வந்த சிமெண்ட் கலவை வாகனம் மோதியதில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விபத்து வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி