திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவோம்.. திருமாவளவன் அதிரடி

236பார்த்தது
திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவோம்.. திருமாவளவன் அதிரடி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், ராமதாஸின் பாமகவை திமுக கூட்டணிக்குள் சேர்த்தால், விசிக கூட்டணியை விட்டு வெளியேறும் என எச்சரித்துள்ளார். விசிக மீதான நம்பகத்தன்மையை இழக்க விரும்பவில்லை என்றும், திமுக எடுக்கும் முடிவு தங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார். திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.