காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டில் சாலை வசதி கோரி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் மழையால் சாலை குண்டும் குழியுமாகி, விளைநிலம் போல் காட்சியளிப்பதால் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தகவலறிந்து வந்த காஞ்சி தாலுகா போலீசார் பெண்களை சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.