
கன்னியாகுமரி
மணக்குடி அருகே பள்ளி பேருந்து விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி அருகே கோவில்விளை பகுதியில் இன்று காலை தனியார் சிபிஎஸ்இ பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. பள்ளி மாணவிகளை ஏற்றி வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் அனைவரும் பெரிய காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து பலத்த சேதமடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




