குமரி ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா!

1பார்த்தது
குமரி ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா!
அசாம் மாநிலம் திப்ருகரிலிருந்து கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே போலீஸார் நடத்திய சோதனையில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.