கன்னியாகுமரியில் நடுரோட்டில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

5பார்த்தது
கன்னியாகுமரியில் நடுரோட்டில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
கன்னியாகுமரியில் நேற்றுமுன்தினம் இரவு, சின்னமுட்டத்தைச் சேர்ந்த ஆன்றனி தாமஸ் சபிக் (27), அச்சு (27) மற்றும் சகாய வளன் இன்பேன்ட் (27) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, புதுக்கிராமத்தைச் சேர்ந்த ஜெப்ரின் ஜித், சின்னமுட்டத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் லக்ஸ் மற்றும் ராபின் ஆகியோர் மதுபோதையில் அவர்களை வழிமறித்து தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த ஜெப்ரின் ஜித், அரிவாளால் ஆன்றனி தாமஸ் சபிக் மற்றும் அச்சு ஆகியோரை வெட்டினார். சகாய வளன் இன்பேன்டையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி