கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வடக்கூர் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 26 வயது பெண், வழக்கு சம்பந்தமாக பூதப்பாண்டி கோர்ட்டுக்கு வந்தபோது, அங்கு வேறொரு வழக்குக்காக வந்த பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (29), மணிகண்டன் (34) மற்றும் காட்டுப்புதூரை சேர்ந்த மணிகண்டன் (31), அழகனாபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பிஜு ஆகிய 4 பேர் அந்த பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.