குமரியில் 90 கிலோ புகையிலை பறிமுதல்; 6 கடைகளுக்கு சீல்.

0பார்த்தது
குமரியில் 90 கிலோ புகையிலை பறிமுதல்; 6 கடைகளுக்கு சீல்.
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நாகர்கோவில், தோவாளை, ராஜாவூர் உள்ளிட்ட 6 இடங்களில் 74 கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 6 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 90 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த 6 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி