கன்னியாகுமரி: மழையால் குளமாக மாறிய சாலை

59பார்த்தது
கன்னியாகுமரி: மழையால் குளமாக மாறிய சாலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் சாலை தண்ணீர் தேங்கி குளம் போல் மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மழைநீர் வடிகால் ஓடை சரிவர இல்லாததால் தண்ணீர் சாலையில் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி