திருமணம் ஆகாத ஏக்கத்தில் மனமுடைந்த நிலையில் இருந்த பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி பகுதியை சேர்ந்த ஐவின் பிரபாகர் (31) என்பவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர், பெற்றோரிடம் தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.