கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற சிறுமியை, இளைஞர் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று தனியார் விடுதியில் தங்க வைத்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர், சிறுமியை ஊருக்கு அனுப்பிவிட்டு இளைஞர் தப்பியோடியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.