கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் பகுதியைச் சேர்ந்த தங்கலதா (48) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, முன்விரோதம் காரணமாக அஜித் (22) என்பவர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தங்கலதா அளித்த புகாரின் பேரில், ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் என்பவரை நேற்று கைது செய்தனர்.