கன்னியாகுமரி அருகே குருசடியில் திருடிய வாலிபர் கைது

74பார்த்தது
கன்னியாகுமரி அருகே குருசடியில் திருடிய வாலிபர் கைது
கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மாதா குருசடி உள்ளது. சம்பவத்தன்று இந்த குருசடியில் வாலிபர் ஒருவர் புகுந்து வெண்கல குத்து விளக்கை திருடிச் சென்றுள்ளார். 

இதுகுறித்து கோவளம் பங்குத் தந்தை சுனில் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் திருவனந்தபுரம் கருங்குந்நத்தையை சேர்ந்த ஷினு மகன் ஷானு (வயது 19) என்பவர் குத்துவிளக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி