அஞ்சுகிராமம் அருகே இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு

64பார்த்தது
அஞ்சுகிராமம் அருகே இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மேட்டு குடியிருப்பைச் சேர்ந்தவர் மைக்கேல் லாரன்ஸ், (25). தனியார் கம்பெனியில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் காமராஜர் நகர் புது காலனியில் வரும்போது விக்னேஷ் என்பவர் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்காததால் அவரை மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி