கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முதல் நிலை பேரூராட்சி, 13-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் குண்டும் குழியுமாக இருந்த சாலை நேற்று சீரமைக்கப்பட்டது. பழுதடைந்த வண்ண தரை கற்கள் அகற்றப்பட்டு புதிய வண்ண கற்கள் பதிக்கப்பட்டன. இந்த பணியை குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், 13வது வார்டு கவுன்சிலருமான ஆதி லிங்க பெருமாள் துவக்கி வைத்தார்.