ஆண்டிதோப்பு: டிரைவரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

51பார்த்தது
ஆண்டிதோப்பு: டிரைவரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 45. டிரைவரான இவர் ஆண்டிதோப்பு சந்திப்பில் செல்லும்போது அவரை மனோ சிங்  (27) என்பவர் தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த 150 ரூபாயை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து மனோசிங்கை கைது செய்தனர். அவர் மீது 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி