மயிலாடி அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

80பார்த்தது
மயிலாடி அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள மயிலாடிபுதூரைச் சேர்ந்தவர் வேல்குமார் (வயது 56), ஆட்டோ டிரைவர். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவருடைய மனைவி பார்வதி (39) கண்டித்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வேல்குமார் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். 

அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி