கன்னியாகுமரியில் அனுமதியின்றி மினி பஸ்கள் தடம் மாறி இயக்கப்படுவதைக் கண்டித்து, ஆட்டோ டிரைவர்கள் இன்று (டிச. 2) திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 450-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் குமரி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.