அருமநல்லூர் பகுதியில் பைக் திருட்டு - சிசிடிவி காட்சி

62பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் அருகிலுள்ள செக்கடி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பைக் திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி