கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் கருப்பு அரிவாள் மூக்கன் பறவைகள் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. அவை வயல் வெளிகளில் கூட்டமாக வந்து இரை தேடுவது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. பொதுவாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பறவைகள் இங்கு அதிகம் வரும். ஆனால் தற்போது மே மாதத்தில் பறவைகள் வருவது பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.