கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை காலத்தை முன்னிட்டு தற்போது வந்து கொண்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து காலை 8 மணி முதல் நடைபெற்று வந்த படகு சேவை இன்று முதல் காலை 7 மணி முதல் நடைபெறும் என இன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.